தமிழகம் முழுவதும் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க தமிழக அரசு உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




21/12/2020

தமிழகம் முழுவதும் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க தமிழக அரசு உத்தரவு


 தமிழகம் முழுவதும் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. 

தமிழக அரசு, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான பணப்பலன்களை வழங்குவதற்காக ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2019ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

2019 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஓய்வுபெற்ற ஊழியர்கள் இதன் மூலம் பணப்பலன்கள் பெற முடியும். தமிழகம் முழுவதும் எட்டு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் இதன்மூலம் பயனடைய முடியும்.” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459