சென்னை,
கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் காலக்கட்டத்தில் பணியிட வளாகம் மற்றும் பொதுப்பகுதிகளை தொற்றில்லாமல் வைத்துக்கொள்ளவும், சுத்தப்படுத்துவதை உறுதி செய்யவும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதனடிப்படையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முழு அளவில் மேற்கொள்வதற்காக இரண்டாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டு, சுத்தப்படுத்தும் பணிகள் நடத்தப்பட வேண்டும்.
அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பொதுத்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, கொரோனா தொற்று ஏற்படாத வகையில் அனைத்து அலுவலகங்களையும் சுத்தப்படுத்துவதற்காக 12–ந்தேதி (நாளை) முழுவதும் தலைமைச்செயலகம் மூடப்படுகிறது.
No comments:
Post a Comment