சிபிஎஸ்சி பொதுத்தேர்வு எப்போது நடக்கும் அமைச்சர் விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/12/2020

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு எப்போது நடக்கும் அமைச்சர் விளக்கம்


டெல்லி: சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ஜனவரி, பிப்ரவரியில் நடத்தப்படாது என்றும் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மத்திய கல்வி அமைச்சர்ர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தி வருகின்றன.கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை. 10, 11, 12 என பொதுத்தேர்வு மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தியுள்ளது.மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டது. வேளாண் சட்டத்தை விவாதிக்க... சிறப்பு சட்டமன்ற கூட்டம்... கேரள அரசின் முடிவுக்கு கவர்னர் எதிர்ப்பு! அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அந்த அட்டவணை போலியானது என சிபிஎஸ்சி விளக்கம் அளித்திருந்தது.பொதுவாக நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் ஜனவரி அல்லது பிப்ரவரியில் இந்த தேர்வுகள் நடத்தப்படும். இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று ஆசிரியர்களுறான் நேரடியாக உரையாடினார்.அப்போது அவர் கூறுகையில், ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது. பல சிபிஎஸ்இ பள்ளிகள் கிராமப்புறங்களில் உள்ளன, எனவே, ஆன்லைன் தேர்வுகள் சாத்தியமில்லை. தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.'!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459