இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




05/12/2020

இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு

 


கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) க.முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் கல்லூரிகளில் 2 மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள், முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு டிச. 23-ம் தேதி தொடங்குகிறது. அரியர் வைத்துள்ள மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தை www.b-u.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து டிச. 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) ஆர்.விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மே மற்றும் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்த தொலைதூரக் கல்விக்கூட இறுதியாண்டு மாணவர்களுக்கு டிச. 14 முதல் தேர்வு நடைபெறுகிறது. மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, தங்களது சுய விவரங்களை டிச. 9-ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459