பஞ்சாபில் 2வது கட்டமாக 80 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் 2017 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ‘பஞ்சாப் ஸ்மார்ட் இணைப்பு திட்டத்தின்’ கீழ் முதல் கட்டமாக 12வது படிக்கும் 50,000 மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டது.இந்நிலையில், 2வது கட்டமாக 12வது படிக்கும் 80,000 மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை காணொளி மூலம் வெள்ளிக்கிழமை பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தொடங்கி வைத்தார்.இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் பேசியதாவது,“முதல் கட்டம் முடிவடைந்த நிலையில், 2வது கட்ட திட்டத்தை எனது அரசாங்கத்தின் சார்பாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கரோனா பேரிடர் காலத்தில் கல்வி பயில்வதில் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க இந்த ஸ்மார்ட் போன்கள் மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்” என கூறினார்.
No comments:
Post a Comment