தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில்,
குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடம்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்
தொண்டி 10 செ.மீ மழையும், வட்டானம், குடவாசல் தலா 6 செ.மீ மழையும், நாகப்பட்டினம், மன்னார்குடி, வேதாரண்யம், திருவாடனை, காரைக்கால், கடலூர், மீமிசல், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், அதிராமபட்டினம் தலா 5 செ.மீ மழையும், மதுக்கூர், தலைஞாயிறு, பாபநாசம், பட்டுக்கோட்டை தலா 4 செ.மீ மழையும், நீடாமங்கலம், பேராவூரணி, மணிமுத்தாறு, நன்னிலம், புதுச்சேரி, பரமக்குடி, பாம்பன் ஒரத்தநாடு, அய்யம்பேட்டை, விளாத்திகுளம், எட்டயபுரம் தலா 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.
No comments:
Post a Comment