சிபிஎஸ்சி பொதுத்தேர்வு.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு.. தேர்வு அட்டவணை டிசம்பர் 31-ந்தேதி வெளியீடு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/12/2020

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு.. தேர்வு அட்டவணை டிசம்பர் 31-ந்தேதி வெளியீடு!

 


ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சிபிஎஸ்இ தேர்வு நடத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிபிஎஸ்சி பொதுத்தேர்வு தேதிகள் பற்றி டிசம்பர் 31-ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 8 மாசமாக லாக்டவுன் அமலில் இருக்கிறது.. இதனால், இதனால், ஸ்கூல்கள், காலேஜ்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன... இதன்காரணமாக, சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளையும் மத்திய அரசு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது.இதுகுறித்து ஒருமுறை, மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இப்போதைய சூழலை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்சி 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டில் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்சி ஏற்பாடு செய்து வருகிறது... இதுகுறித்து கலந்தாலோசித்தபிறகு தேர்வு குறித்து முடிவு செய்யப்படும்" என்றார். வந்தது அறிவிப்பு.. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.. மாடுபிடிவீரர்கள் குஷி அதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன் மாணவர்களுடன் உரையாடிய ரமேஷ் போக்ரியால், சிபிஎஸ்சி தேர்வுகள் ஆன்லைனில் சாத்தியமில்லை.. ஏனென்றால், ஒவ்வொரு மாணவருக்கும் லேப்டாப், இன்டர்நெட், மின்சாரம் தேவைப்படுவது மிகப்பெரிய சவால்.." என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில், சிபிஎஸ்சி பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த முக்கிய அறிவிப்பு டிசம்பர் 31ஆம் தேதியன்று வெளியாகும் என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார்... இதுகுறித்து தன்னுடைய ட்வீட்டில், "மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு... சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு தேர்வு தொடங்கும் தேதி பற்றிய அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி வெளியிடுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.'

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459