2 வாரங்களில் 104 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியது எப்படி ? - ஆசிரியர் மலர்

Latest

 




14/12/2020

2 வாரங்களில் 104 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியது எப்படி ?


சென்னை ஐஐடியில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மாணவர்கள் பின்பற்றவில்லை என ஐஐடி இயக்குநர் பாஸ்கர ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா நோய் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சென்னை ஐஐடியில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவது மாணவா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 வாரங்களில் இங்கு பயிலும் 66 மாணவா்கள், 4 உணவக ஊழியா்கள் உள்பட 71 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 32 பேருக்கு புதிதாக நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மேலும் 33 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அங்குப் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து பேசிய ஐஐடி இயக்குநர் கூறியதாவது,

சென்னை ஐஐடியில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மாணவர்கள் முறையாக பின்பற்றாததால் கரோனா பரவியுள்ளது. மேலும், ஐஐடி வளாகத்தில் தற்போது பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459