பிரிட்டனிலிருந்து டெல்லி திரும்பிய 11 பேருக்குக் கொரோனா உறுதி - புதிய கொரோனாவா? தீவிர கண்காணிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/12/2020

பிரிட்டனிலிருந்து டெல்லி திரும்பிய 11 பேருக்குக் கொரோனா உறுதி - புதிய கொரோனாவா? தீவிர கண்காணிப்பு

 


பிரிட்டனிலிருந்து டெல்லி வந்த 4 விமானங்களில் வந்திறங்கிய 11 பயணிகளுக்கு டெல்லி விமான நிலையப் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பிரிட்டனில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு தினசரியும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் இருந்து வெளிவரும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உருமாற்றம் அடைந்த கொரோனாவினால் மரணம் ஏற்படும் அபாயம் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் முந்தைய கொரோனா வகை மாதிரியை விட இது 70% அதிகம் பரவக்கூடியது என்று கூறுகின்றனர், மத்திய அரசும் நேற்று இந்த புதுவகை கொரோனா பெரும்பரவல் வகையறாவைச் சேர்ந்தது என்று எச்சரித்துள்ளது.இதனிடையே பிரிட்டனிலிருந்து டெல்லி வந்த 4 விமானங்களில் வந்திறங்கிய 11 பயணிகளுக்கு டெல்லி விமான நிலையப் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஜெனஸ்ட்ரிங் டயாக்னிஸ்டிக் சென்டரின் நிறுவனர் கௌரி அகர்வால் இதனை உறுதி செய்தார். லண்டனிலிருந்து 950க்கும் கூடுதலான பயணிகள் வந்துள்ளனர், அவர்களுக்கு டி3 முனையத்தில் உள்ள எங்கள் சோதனைச் சாலையில் கொரோனா சோதனை நடத்தப்பட்டது இதில் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கௌரி அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த 11 பேரின் கொரோனா மாதிரிகளும் மேலும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அப்போதுதான் அதில் புதுவகை கொரோனா இருக்கிறதா என்பது கண்டறியப்பட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். உருமாறிய கொரோனா: இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 2800 பேர் தீவிர கண்காணிப்பு - விஜயபாஸ்கர்பிரிட்டனிலிருந்து விமானத்தில் வருபவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என்றால் அவர் அமர்ந்து வந்த விமான இருக்கை வரிசைக்கு முந்தைய 3 வரிசை மற்றும் பிந்தைய மூன்று வரிசை பயணிகளும் தனிமைப்படுத்தப்படுவது அவசியம் என்று மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459