ரூ. 10 ஆயிரம் முதல் ரூ 30 ஆயிரம் வரை ஊதியம்.. டிச. 18 இல் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றிடுங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




10/12/2020

ரூ. 10 ஆயிரம் முதல் ரூ 30 ஆயிரம் வரை ஊதியம்.. டிச. 18 இல் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றிடுங்கள்


 சென்னை: பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையம் சார்பாக சென்னையில் வரும் 18-ஆ்ம தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலும் தேவையான தகுதி மற்றும் அனுபவம் பெற்றுள்ள பொதுப் பிரிவினரும் கலந்து கொள்ளலாம். சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையத்தில் அதாவது வேலைவாய்ப்பு அலுவலகக் கட்டடம், மூன்றாவது தளத்தில் நடைபெறுகிறது.காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. பிபிஓ, வங்கி, காப்பீடு, மின் வர்த்தகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், விளம்பரத் துறை, மனிதவள மேம்பாடு, சந்தைப்டுத்துதல் உள்ளிட்ட துறைகளில் புதியவர்களும் அனுபவம் உள்ளவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன. மாதம் ரூ 10 ஆயிரம் முதல் ரூ 30 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும். வயது வரம்பு 20 முதல் 35 வரை மட்டுமே. இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதே நேரம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் தகுந்த பணிகள் வழங்க தேர்வு செய்யப்படுவர். திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்.. 5ம் வகுப்பு தகுதி.. எப்படி விண்ணப்பிப்பது? விருப்பமுள்ளவர்கள் நேரடியாக வரலாம். பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையத்தின் வேலைவாய்ப்பு இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்யலாம். இதற்காக ஆதார் எண் அவசியம் தேவை.நேர்காணலுக்கு வரும் போது முக்கிய ஆவணங்களின் அசலையும் நகல்களையும் முகாமிற்கு எடுத்துவர வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 044-24615112 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459