மேற்கு வங்கத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு வரும் ஜூன் மாதம் முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
10-ஆம் வகுப்புகளுக்கு முதலில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து 12-ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் நிலையில் கரோனா தொற்றால் தற்போது காலதாமதமாக நடக்கிறது.
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் வரை பொதுத்தேர்வு நடத்தப்படாது என்று ஏற்கனவே கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியம், மேற்கு வங்க உயர்நிலைக் கல்வி கவுன்சில் ஆகியவற்றின் பரிந்துரையின்படி பொதுத்தேர்வுகள் காலதாமதமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கூறினார்.
எனினும் கரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப இந்த முடிவில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment