பெங்களூரு: கர்நாடகத்தில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பள்ளிகளில் வருகைப்பதிவு கட்டாயமில்லை என்றும், விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிக்கு வராத மாணவர்களுக்காக இணைய வழியிலும் பாடங்கள் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மீண்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர் எடியூரப்பா, மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார், சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், தலைமைச் செயலாளர் ரவிக்குமார் உள்பட அதிகாரிகளுடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
சுமார் ஒருமணிநேரத்திற்கு இந்த ஆலோசனை நடைபெற்றது. பிறகு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக ஒரு மாதத்தில் 15 நாள்களுக்கு பள்ளிகளை திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து படிப்படியாக முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பு பள்ளிக் கட்டடங்கள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு, கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment