நீதிமன்றத்துக்கு சரியான தகவல் தரவில்லை என்றால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத்துக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் வழியில் பயின்று 20% இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் விவரத்தை தர உத்தரவிடப்பட்டுள்ளது.
முழு விவரங்களை டி.என்.பி.எஸ்.சி தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. 20% இடஒதுக்கீட்டில் முறைகேடு செய்தால் தமிழ் வழியில் பயின்றவர்கள் நிலை என்ன? எனவும் வினவியுள்ளது.
தொலைதூர கல்வியில் படித்து பணிக்கு சேர்ந்தவர்களின் முழு விவரங்களை சரியான தகவல்களாக தர வேண்டும். விவரங்களை தரவில்லை எனில் லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உட்படுத்த நேரிடும் என்று உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment