தில்லியில் செயல்பட்டு வரும் இந்திய திட்டம் மற்றும் மேலாண்மை நிறுவனம் (ஐஐபிஎம்) வழங்கும் பட்டங்கள் செல்லாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.இது தொடா்பாக யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு: புதுதில்லியில் பகுதி -2 குதுப் என்கிளேவ் பகுதியில் செயல்பட்டு வரும் ஐஐபிஎம், யுஜிசி சட்டப்படி பல்கலைக்கழகம் அல்ல. மேலும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை வழங்கும் உரிமையும் அந்த நிறுவனத்துக்கு இல்லை. யுஜிசி அங்கீகாரம் அந்த நிறுவனத்துக்கு இல்லை என்பதால், பிபிஏ, பிசிஏ, எம்பிஏ படிப்புகளை வழங்கும் தகுதி அந்த நிறுவனத்துக்கு இல்லை. மேலும், இந்த நிறுவனம் பட்டம் வழங்குவதற்கு தடைவிதித்து, தில்லி உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்திருக்கிறது என யுஜிசி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment