இந்தியாவில் தொழிற்துறை ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக இந்திய மக்கள் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் மீது அதிகம் செலவு செய்வார்கள், ஆனால் தொழிற்துறை ஊழியர்கள் மத்தியில் செலவு செய்யும் பழக்கம் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வில் இந்தியத் தொழிற்துறை ஊழியர்கள் மத்தியில் தற்போது செலவு செய்யப்படும் அளவீடுகள் பெரிய அளவில் மாற்றம் அடைந்துள்ளதாகவும், அதிலும் குறிப்பாக உணவு மற்றும் உணவுப் பொருட்களின் மீதான செலவுகளை அதிகளவில் குறைந்துள்ளனர்.
ஆய்வு
2016ஆம் ஆண்டுத் தொழிற்துறை ஊழியர்கள் மத்தியிலான நுகர்வோர் விலைக் குறியீடு-ஐ மையமாக வைத்து ஆய்வு செய்ததில் தொழிற்துறை ஊழியர்கள் உணவுக்காகச் செலவு செய்யும் அளவீடு 46 சதவீதத்தில் இருந்து 39 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இதே நிலையில் வீடுகளுக்காகச் செலவு செய்யப்படும் தொகை 15.2 சதவீதத்தில் இருந்து 16.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் உடல ஆரோக்கியம் மற்றும் கல்விக்காகச் செலவிடப்படும் அளவீடு 23 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள்
இந்த மாற்றத்தின் மூலம் தொழிற்துறை ஊழியர்களின் சம்பள அளவீட்டிலும், 1.1 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன் பெறுவோரின் கிராக்கிப்படி அளவீட்டில் மாற்றம் தேவை என்பது உணர்த்துகிறது.
2016 ஆண்டின் விலைவாசியுடன் தற்போது விலைவாசி கிட்டதட்ட அனைத்து பிரிவுகளிலும் அதிகரித்துள்ளதால் அரசு ஊழியர்களின் சம்பள அளவீடுகள் மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு 5 வருடத்திற்கும் சம்பள அளவீடுகள் மாற்றப்படும் நிலையில், இன்று வரையில் 2001 நிலுவையிலேயே சம்பளம் கணக்கிடப்படுகிறது
.வர்த்தகம்
தற்போது செய்யப்பட்ட ஆய்வின் மூலம் ஊழியர்கள் வாங்கும் பொருட்களின் அளவீடும் வகைகளும் அதிகரித்துள்ளது. எனவே மத்திய அரசு, ஊழியர்களின் சம்பளத்தைக் கணக்கிடும் போது கருத்தில் கொள்ளும் 78 துறை எண்ணிக்கையை 88 ஆக உயர்த்த வேண்டும் எனவும் இந்த ஆய்வுகள் கூறுகிறது.
கடந்த 15 வருடத்தில் எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில வருடங்களாக ஊழியர்கள் கையில் அதிகளவிலான பணம் புழக்கம் இருப்பதாலும், இதனால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் தொழிலாளர் செயலாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment