ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். இடங்கள் 249 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவ கல்லூரி உள்ளது.
இக்கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்தது. இது வருகிற 2020-2021-ம் கல்வியாண்டில் 249 இடங்களாக உயர்த்தப்பட்டு உள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய இடஒதுக்கீடு 10 சதவீதம் வழங்குவதையொட்டி இந்த இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
புதுவை ஜிப்மர் கல்லூரியில் 150 இடங்கள் இருந்தது. தற்போது 37 இடங்கள் அதிகரித்து 187 ஆக உயர்ந்து உள்ளது. காரைக்கால் ஜிப்மர் கல்லூரியில் 50 இடங்கள் இருந்தது.
தற்போது 12 இடங்கள் அதிகரித்து 62 ஆக உயர்ந்துள்ளது. புதுவை மாணவர்களுக்கு இதுவரை 54 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்து வந்த நிலையில் சீட் அதிகரித்ததன் மூலம் 65 இடங்கள் இனிமேல் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கிடைக்கும்.
பல்வேறு மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் ஜிப்மரில் எம்.பி. பி.எஸ். இடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததற்காக கவர்னர், முதல்- அமைச்சர், தலைமை செயலாளர், ஜிப்மர் இயக்குனர் ஆகியோருக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment