கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இறுதி ஆண்டு தேர்வு எழுதும் கல்லூரி மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அரியர் எழுதுவதற்கு கட்டணம் செலுத்திய அனைவரையும் தேர்ச்சி என அறிவிக்கவும் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரையும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற வைத்தள்ளார். இதன்மூலம் 1.2 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் முதல் பல்கலைக்கழகமாக சென்னை பல்கலைக்கழகம் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment