சர்வதேச அளவில், ஆசிரியர்களை மதிக்கும் நாடுகளின் பட்டியல் : இந்தியா எந்த இடத்தில் உள்ளது ...? - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/10/2020

சர்வதேச அளவில், ஆசிரியர்களை மதிக்கும் நாடுகளின் பட்டியல் : இந்தியா எந்த இடத்தில் உள்ளது ...?

 


லண்டன் : ‘சர்வதேச அளவில், ஆசிரியர்களை மதிக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா, ஆறாவது இடத்தில் உள்ளது’ என, லண்டன் அறக்கட்டளையின் ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வர்கி அறக்கட்டளை சார்பில், உலகில் ஆசிரியர்களின் நிலை குறித்து, மக்களின் கருத்துகளை மதிப்பீடு செய்யும் ஆய்வு நடத்தப்பட்டது. உலகில், 35 நாடுகளில் நடந்த ஆய்வின் முடிவுகள், தற்போது வெளியாகி உள்ளன; இதில், நம் நாடு, கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு, கவுரவம் அளிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா, கானா, சிங்கப்பூர், கனடா மற்றும் மலேஷியாவுக்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.இதுகுறித்து, அறக்கட்டளையின் நிர்வாகி சன்னி வர்கி கூறியதாவது: ஒவ்வொரு நாட்டிலும், 1,000 பேரிடம் ஆசிரியர்கள் குறித்த கருத்துக்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில், நாடுகளை பட்டியலிட்டதில், இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்யும் நாடுகளில், ஆசிரியர்கள் நன்மதிப்புடன் இருக்கின்றனர்.

உலகம் முழுதும், கொரோனா பாதிப்பிற்கு நடுவிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணிகளில் ஈடுபடுவதில், ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதை அறிந்தோம். இதனால், உலகளாவிய சிறந்த ஆசிரியர் பரிசு திட்டத்தை நாங்கள் உருவாக்கினோம். இதில், 75 லட்சம் ரூபாய் பரிசு பெறுபவர் குறித்து முடிவு செய்வதற்கான, இறுதி பட்டியலை உருவாக்கி உள்ளோம். இந்த பட்டியலில், இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநில கிராமத்தின் பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சிங் டிசாலே பெயரும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459