விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை குறித்து தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/10/2020

விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை குறித்து தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

 




தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சேர்ப்பது நடைமுறையில் இருந்து வருகின்ற வழக்கமாகும். எனவே அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் ( 26.10.2020 விஜயதசமி நாளன்று மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தல் சார்பாக கீழ்கண்ட அறிவுரைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. 


அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் அறியும் வண்ணம் ஊர் பொது இடங்களில் பதாகைகள் வைத்தும் , பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கூட்டங்கள் நடத்தியும் , பொது மக்களுக்கு தெரியப்படுத்தி விஜயதசமி நாளன்று 5 . வயதுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் . அங்கன்வாடியில் பயிலும் 5. வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை விஜயதசமி நாளன்று அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 


பள்ளியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள 5. வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை விஜயதசமி நாளன்று அரசுப் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459