சென்னை: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேசிய ஒற்றுமை தினம் (அக்.31) கொண்டாடப்பட வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் ரஜினிஷ் ஜெயின் அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபா் 31-ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு சாா்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அக்.31-ஆம் தேதியில் தேசிய ஒற்றுமை தினத்தை கரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கொண்டாட வேண்டும். அன்றைய நாளில் தேசிய ஒற்றுமைக்கான உறுதிமொழியை ஆசிரியா்கள், மாணவா்கள் எடுத்துக் கொள்வதுடன், வினாடி-வினா உட்பட போட்டிகளையும் நடத்த வேண்டும்.
இதுதவிர நிகழ்ச்சிக்கு ராணுவ அதிகாரிகளை அழைத்து தேச ஒற்றுமை, நாட்டின் பாதுகாப்பு குறித்து பேச வைக்கலாம். அதன்படி கல்லூரிகள் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாட்ட காணொலிகள், புகைப்படங்களை யுஜிசி ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ன்ஞ்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய்/ன்ஹம்ல் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment