புதுடில்லி : கொரோனா பாதிப்பு அதிகரிப்பதையொட்டி, டில்லியில் பள்ளிகள் மூடுவதற்கான உத்தரவை அக்.,31 வரை நீட்டிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. டில்லியில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் வைக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு டில்லியில் அக்.,31 வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக டில்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று (அக்.,4) கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், ஒரு பெற்றோராக நிலைமையின் தன்மையை முதல்வர் கெஜ்ரிவால் புரிந்து கொண்டு அதற்கேற்ப தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
தகுந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறையுடன் செப்.,21 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை தன்னார்வ அடிப்படையில் செல்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இருப்பினும், டில்லி அரசு முன்னதாக பள்ளிகள் திறப்பிற்கு தடை விதித்து, பள்ளிகள் மூடல் உத்தரவை அக்.,5 வரை நீடித்தது. இந்நிலையில், தேசிய தலைநகர் டில்லியில் கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக பள்ளிகள் மூடுவதை அக்.,31 வரை நீட்டிக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. இது தொடர்பான முறையான உத்தரவுகள் நாளை பிறப்பிக்கப்படும்புதிய வழிகாட்டுதலின் படி, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் அக்., 15 க்குப் பிறகு கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மீண்டும் திறக்கப்படலாம். இருப்பினும், கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்கலாமா என்பது குறித்தமுடிவுகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசின் முடிவுக்கு மத்திய அரசு விட்டுள்ளது.
No comments:
Post a Comment