ஆசிரியையாக மாறிய பள்ளி மாணவி - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/09/2020

ஆசிரியையாக மாறிய பள்ளி மாணவி

சோலையூர்: மேட்டுப்பாளையம் அருகே ஊரடங்கால் கல்வி தடைப்பட்டபோதும் மனம் தளராத பழங்குடியின பள்ளி மாணவி வீட்டையே வகுப்பறையாக மாற்றி பிற மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். ஆன்லைனில் படிக்க முடியாத மலைவாழ் கிராம மாணவர்களை தேடி கற்பித்து வரும் 8ம் வகுப்பு மாணவியின் திறனை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென்று விரிந்து கிடக்கிறது கேரளாவின் அட்டப்பாடி வனப்பகுதி. தமிழக எல்லையோர பகுதியான இங்கு சோலையூர் மலை கிராமத்தில் வசிக்கும் சுஜீர்-சுஜா தம்பதியினரின் மூத்த மகள் அனாமிகா உருவாக்கியுள்ள சொந்த வகுப்பறையில் தினமும் கலைக்கட்டுகின்றன.
ஜெர்மன் உள்ளிட்ட பன்மொழி பாட வகுப்புகள். திருவனந்தபுரம் அரசு உண்டு உறைவிட பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் அனாமிகாவுக்கு வறுமையால் ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை படிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அதிலும் டவர் சிக்கலும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அப்போது உதித்ததுதான் சுற்றுவட்டார ஏழை பிள்ளைகளுக்கான இந்த சொந்த வகுப்பு யோசனை. பள்ளிக்கும் செல்ல முடியாமல், ஆன்லைன் படிப்பையும் படிக்க முடியாத அனாமிகா தன்னைப்போன்றே உள்ள பிள்ளைகளை ஒன்று சேர்த்தார். கல்வியின் மகத்துவம் அறிந்த அவரது தந்தைதான் அனாமிகா என்ற மலை கிராம மாணவர்களின் கல்விக்கு அடிப்படை. அட்டப்பாடியை சுற்றியுள்ள 196 கிராமங்கள் கல்விக்காக ஏங்கி கொண்டிருக்க மலை வாழ் மக்களின் விடியலுக்கான வித்தாக மாறி உள்ளது.
இந்த சின்னங்சிறு வகுப்பறை. வழக்கமான பாடங்களுடன் அனாமிகா படித்த தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளும் இங்கு கற்றுக்கொடுக்கப்படுவது மற்றொரு ஆச்சர்யம். அனாமிகாவின் சொந்த வகுப்பறையில், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பிள்ளைகள் சேர்ந்தே பாடங்களை படிக்கின்றனர். ஒற்றுமையாக கற்கின்றனர். அதேசமயம் ஒற்றுமையையும் கற்றுக்கொள்கின்றனர். பல அரசாங்கம் செய்வதாக சொல்லிக்கொண்டிருக்கும் பழங்குடியின மக்களுக்கான கல்வியை எந்த ஆர்பாட்டமுமின்றி அமைதியாக செய்து அசத்தி வருகிறது அனாமிகாவின் இந்த கீற்று கொட்டகை சுமார்ட் க்ளாஸ்…!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459