செல்போன் மூலம் கட்டுப்படுத்தும் நான்கு சக்கர வாகனம் - சேலம் மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


30/09/2020

செல்போன் மூலம் கட்டுப்படுத்தும் நான்கு சக்கர வாகனம் - சேலம் மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!

 


தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், செல்போன் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய பேட்டரியால் இயங்கும் நான்கு சக்கர வாகனம் ஒன்றை உருவாக்கியுள்ளார். 

 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகேயுள்ள பெருமாகவுண்டம்பட்டியில் வசிப்பவர்கள் சுரேஷ்குமார்-ரேவதி தம்பதி. தறி நெசவு கூலித் தொழில் செய்து வரும் இவர்களது முதல் மகன் உதயகுமார், திருச்சி அண்ணா பல்கலைகழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியர் இறுதியாண்டு பயின்று வருகிறார். சிறு வயது முதலே பல்வேறு படைப்புகளில் ஆர்வம் கொண்ட உதயகுமார், ஏற்கெனவே வெட்டுகிளிகளை அழிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டுப்பிடித்தார்... 

 

அதனைத் தொடர்ந்து, தற்போது டெக் இன்வென்ட்டர் எனும், ஆளில்லாமல் செல்போன் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய பேட்டரியால் இயங்கும் நான்கு சக்கர வாகனம் ஒன்றை தயாரித்துள்ளார். அந்த வாகனத்தை, உலகத்தில் எங்கு இருந்து வேண்டுமானாலும் இயக்கும் விதத்தில் உருவாக்கி அசத்தியுள்ளார்... ராணுவத்தில், வீரர்களின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் இந்த வாகனத்தை வடிவமைத்துள்ளதாக கூறுகிறார் உதயகுமார்... 

 

பேட்டரியால் இயங்குவதால், இந்த வாகனம் காற்று மாசை ஏற்படுத்தாது என்பது சிறப்பம்சமாக உள்ளது. ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல், பயனுள்ளதாக மாற்றியுள்ள உதயகுமாரின் கண்டுப்பிடிபை, அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.-NewsJ

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459