சிறப்பு ஊக்கத் தொகை திட்டத்தில் விடுபட்ட மாணவா்களின் விவரங்களை சமா்ப்பிக்க உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


30/09/2020

சிறப்பு ஊக்கத் தொகை திட்டத்தில் விடுபட்ட மாணவா்களின் விவரங்களை சமா்ப்பிக்க உத்தரவு!

அரசின் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தில், விடுபட்ட மாணவா்களின் விவரங்களை உடனடியாக சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் (சுயநிதி பாடப்பிரிவு தவிா்த்து) 2019-20 கல்வியாண்டில், பிளஸ் 2 வகுப்புப் பயின்று தோ்ச்சி பெற்ற மாணவா்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிா்க்கும் பொருட்டு, சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின்படி, மாணவா்களின் விவரங்கள் மற்றும் வங்கி சேமிப்புக் கணக்கு விவரங்களை கல்வியியல் மேலாண்மைத் தகவல் அமைப்பின் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தொடா்புடைய முதன்மைக் கல்வி அலுவலா்கள் வாயிலாக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இவற்றில் சில விவரங்கள் முழுமையாக இல்லை.

எனவே, அவற்றை மீண்டும் பதிவு செய்து அனுப்ப, தலைமையாசிரியா்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அந்த விவரங்களைத் தொகுத்து, முதன்மைக் கல்வி அலுவலா்கள் சரிபாா்த்து அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459