கடந்த சில வாரங்களாகவே சரிவில் இருந்து வரும் தங்கம் விலையானது, பெரிய அளவில் ஏற்றத்தினை காணவில்லை. பலத்த தடுமாற்றத்தில் தான் காணப்படுகிறது.
ஒரு புறம் தங்கம் ஏற்றத்திற்கான காரணங்கள் பல இருந்தாலும், அவ்வளவாக ஏற்றம் காணவில்லை என்றே கூறலாம்.
எனினும் தங்கம் விலையானது வாங்குவதற்கான விலைக்கு அருகில் தான் உள்ளது என்கின்றனர் சர்வதேச நிபுணர்கள்.data-gal-desc="எனினும் தங்கம் மீண்டும் சரிவினை எட்டும். அது செப்டம்பர் பிற்பகுதியிலோ அல்லது அக்டோபர் தொடக்கத்தில் இருக்க வேண்டும். எனினும் அது விரைவில் ..." data-gal-headline="தங்கம் விலை அதிகரிக்க தொடங்கலாம்"
தங்கம் விலை அதிகரிக்க தொடங்கலாம்
எனினும் தங்கம் மீண்டும் சரிவினை எட்டும். அது செப்டம்பர் பிற்பகுதியிலோ அல்லது அக்டோபர் தொடக்கத்தில் இருக்க வேண்டும். எனினும் அது விரைவில் பச்சை மண்டலாமாக மாறும் என்று கடந்த வாரம் நிபுணர்கள் கூறியிருந்தது நினைவ்புகூறத்தக்கது. அதாவது இந்த சுழற்சி முறையில் தங்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம் என்று கூறுகின்றனர்.
இந்த பியரிஷ் வே முடிவுக்கு வருகிறது. இந்த செப்டம்பர் இறுதி முதல் அக்டோபர் தொடக்கத்தில் தங்கம் விலையானைது (1725 – 1810) இந்த விலையினை தொடலாம் என கணித்திருந்தோம். ஆனால் தற்போது தங்கம் செல்லிங் வே முடிவுக்கு வந்துவிட்டது எனலாம். நீண்டகால நோக்கில் தங்கத்தினை வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் கிட்கோ செய்தியில், தங்கம் விலையானது அடுத்த வாரம் உறுதியான ஆதரவைக் காணவில்லை. எனினும் இந்த வீழ்ச்சி முடிவதற்குள் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1800 டாலரை தொடலாம் என்கிறது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு விலைமதிப்பற்ற உலோகங்கள் ஆய்வாளர் சுகி கூப்பர் கூறியுள்ளார்.
அதோடு தங்கம் விலையானது இவ்வளவு சரிந்துள்ளதால், பையிங் டிரெண்ட் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தமில்லை. நிச்சயம் இது ஏற்றம் காணும். ஏனெனில் எந்த காரணிகளும் மாறவில்லை. அப்படியே தான் உள்ளது. தங்கத்தினை விலையில் எதிரொலிக்கும் முக்கிய காரணிகள் அனைத்துமே தங்கத்திற்கு எதிராகத் தான் உள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனினும் அமெரிக்கா தேர்தலை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை, கொரோனா வைரஸ், இதனால் ஏற்படும் பொருளாதார சரிவு, பொருளாதாரத்தினை மீட்டு எடுப்பதற்கான நடவடிக்கை, உள்ளிட்டவற்றை முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர். ஏனெனில் இவை அனைத்துமே சந்தையில் பெரும் ஏற்ற இறக்கத்தினை ஏற்படுத்த கூடியவை. இதனால் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
முக்கிய சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்
எனினும் ஏற்கனவே லாபம் பார்த்த முதலீட்டாளர்கள் நல்ல வாய்ப்பினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் போது மீண்டும் அவர்கள் நுழைவார்கள் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல் 1850 டாலர்களாகும். இதனை உடைத்து சென்றால் 1820 டாலர்கள் வரை செல்லலாம். இதே ஏற்றம் காணும் போது 1875 டாலர் என்பது முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாகும். இதனையடுத்து 1900 டாலர்கள் அடுத்த லெவலாகும். இந்த 1900 டாலர்களை தொடும் போது சந்தை சற்று மேலே ஏற்றம் காணத் தொடங்கிவிடும்.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த வாரத்தில் நிபுணர்கள் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல் 1850 டாலர்கள் என கூறியுள்ளனர். ஆனால் கடந்த வாரத்தில் அதிகபட்ச குறைந்த விலையே 1851 டாலராகும். ஆக வரும் வாரத்தில் தங்கம் விலையில், டாலரின் மதிப்பு முக்கிய பங்கு வகிக்கும். இந்த நிலையில் தங்கம் வாங்குவதற்காக நல்ல வாய்ப்பினைக் கொடுக்கும் என்றும் ஆர் ஜே ஓ பியூச்சர்ஸ் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் இரண்டாம் கட்டத்தினை எட்டிட்யுள்ளதோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதனால் சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில், இனியும் இது எந்த அளவுக்கு சரியுமோ என்ற பயத்தினையும் உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில் அமெரிக்காவில் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு, ஊக்குவிப்பு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இது இன்னும் எதிர்மறையாகவே இருந்து வருகின்றது. அவ்வாறு இந்த ஊக்குவிப்பு தொகைகள் அறிவிக்கப்பட்டால், இது பொருளாதாரத்திற்கு ஊக்குவிப்பினை அளிக்கும். இது தங்கத்திற்கு எதிர்மறையாக அமையலாம். ஆனால் அப்படி ஏதும் உடனடியாக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பையிங் டிரெண்ட் முடியவில்லை
No comments:
Post a Comment