நீட் தேர்வின் போது மாணவர்களின் ஆபரணங்களை அகற்றும்படி நிர்பந்திக்கக்கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் அணிந்திருந்த ஆபரணங்கள் முழுவதும் அகற்றப்பட்டப் பின்னரே அவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் தமிழகத்தில் தேர்வு எழுத வந்த புதுமணப்பெண்ணின் தாலி, மெட்டி,காதணி, மூக்குத்தி உள்ளிட்டவை தேர்வு மைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பின்னர் அவர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் திருமணமான பெண்கள் புனிதமாக கருதும் தாலி, மெட்டி மற்றும் காதணி, போன்றவற்றை தேர்வு அறைக்குள் செல்லும்போது அகற்றும்படி நிர்பந்திக்கப்படுகிறது. இந்த நிபந்தனை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்கவேண்டும். ஆபரணங்களை அகற்றும்படி, மாணவிகளை நிர்பந்திக்ககூடாது என அதில் கோரிக்கை வைத்துள்ளார்.
No comments:
Post a Comment