கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள், உயிரிழப்புகள் 2 மில்லியனை தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகளவில் கொரோனாவால் 3,27,70,836 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,93,555 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்து பயன்பாட்டுக்கு வருவதற்குள், உயிரிழப்புகள் 2 மில்லியனை கடக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதனால் உலக நாடுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அவசரகால மருத்துவ வல்லுநர் மைக் ரியான் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு இளைஞர்களை குறை சொல்லக் கூடாது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது’ என்றார்.
சில நாடுகளில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தொடங்கும் என கூறப்படுகிறது. அதனால் உலக நாடுகள் சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடித்து நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.-News7

No comments:
Post a Comment