ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு தொடங்கியது- நாடு முழுவதும் 1.6 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/09/2020

ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு தொடங்கியது- நாடு முழுவதும் 1.6 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

 


தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு, நாடு முழுவதும் இன்று தொடங்கியது.தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு, நாடு முழுவதும் இன்று தொடங்கியது.

புதுடெல்லி:
நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களே இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.
இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு கடந்த ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடந்து முடிந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்து 4 ஆயிரம் பேர் எழுதி இருந்தார்கள். இதற்கான தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
முதன்மை தேர்வுகளில் வெற்றி பெறும் தேர்வர்கள் அடுத்த கட்டமாக ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வை எழுத தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். அதன்படி, அட்வான்ஸ்டு தேர்வு நாடு முழுவதும் இன்று தொடங்கியது. நாடு முழுவதும் 222 நகரங்களில் 1,000 மையங்களில் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 1.60 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். 
காலை 9 மணிக்கு தாள்-1 தேர்வு தொடங்கியது. இத்தேர்வு 12 மணி வரை நடைபெறும். பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும். 
தேர்வர்கள் சுய அறிவிப்பு படிவம் உட்பட தேர்வுக்கான ஹால் டிக்கெட்டின் அனைத்து பக்கங்களையும் கட்டாயம் பிரின்ட் எடுத்து கொண்டு வர வேண்டும், புகைப்பட அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும், பால் பாயின்ட் பேனா கொண்டு வரவேண்டும். இவற்றை கொண்டு வந்த மாணவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். 
மேலும் கொரோனா கால விதிமுறைகளும்  கடுமையாக பின்பற்றப்படுகிறது. தேர்வர்கள் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க், கையுறை அணிந்திருக்க வேண்டும், கைகளை சுத்தம் செய்யும் சானிடைசர்கள் கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459