துறை முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீதான எடுக்கப்பட்ட நடவடிக்கையினை உடன் தெரிவிக்க CEO உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/07/2020

துறை முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீதான எடுக்கப்பட்ட நடவடிக்கையினை உடன் தெரிவிக்க CEO உத்தரவு




தொடக்கக் கல்வித்துறையின்கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்கள் துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றுள்ளமைக்கு சிறப்பு நிகழ்வாக கருதி பின்னேற்பு வழங்க வேண்டி பெறப்பட்ட கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டதாகவும் , அரசு கடித 22139 / தொ.க 1 ( 2 ) / 2015 நாள் .18.11.16 கடிதத்தில் அரசு பணியாளர்கள் உயர்கல்வி பயில துறைத் தலைவரின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையில் , துறைத் தலைவரின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விவரத்தினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. எனவே துறை முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றமைக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கெண்டதற்கான உரிய விளக்கம் , பெறப்பட்ட விளக்கத்தின் மீது திட்டவட்டமான மேற்குறிப்புரையினையும் வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெற்று உடன் அனுப்பி வைக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் கரூர் / குளித்தலை கேட்டுக்கொள்ளப்பட்டும் நாளதுவரை அறிக்கை அனுப்பாதது மிகவும் வருந்தத் தக்கதாகும். எனவே இதனை மிக அவசர நிகழ்வாகக் கருதி உடன் அறிக்கை அனுப்பிவைக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459