ஜூன் மாத துவக்கம் கேரளாவுக்கு அதிர்ச்சி ஊட்டுவதாகவே இருந்தது. தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாகக் கல்விச் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்குக் குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்குத்தொலைக்காட்சி மூலமாக ஜூன் 1ஆம் தேதி பரீட்சார்த்த வகுப்புகள் தொடங்கப்பட்டன. மலப்புரம் பகுதியில் வசித்த 14 வயதுக் குழந்தை தன் வீட்டில் தொலைக்காட்சி வசதி இல்லை என்பதாலும் அதனால் அரசு நடத்தும் மெய் நிகர் வகுப்பில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டாள். கோவிட் 19க்கு எதிரான போரில் மிகச்சிறப்பான செயல்பாடுகளால் தேசிய அளவில் கவனிக்கத்தக்க வகையில் முன்னேறிக் கொண்டிருந்த கேரளாவுக்கு இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது
.
எங்கள் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பழுதாகி விட்டிருந்தது. சரிசெய்ய வேண்டுமென என் மகள் சொல்லிக் கொண்டே இருந்தாள். என்னால் அதனை பழுது நீக்கம் செய்ய முடியவில்லை. அதற்கு மாற்றாக நவீனமான போனையும் என்னால் ஏற்பாடு செய்ய முடியவில்லை என்கிறார் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தினக்கூலியான அந்தக் குழந்தையின் அப்பா.
ஓரிரு நாட்கள் இடைவெளியில் நிருபர்களைச் சந்தித்த கேரள முதல்வர், இது பரிட்சார்த்தமான ஒளிபரப்பு மட்டுமே. இந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே ஒருவார கால இடைவெளியில் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படும். இணைய வசதியின்மை என்பது ஒரு தடையாக இல்லாமல் அனைத்துக் குழந்தைகளும் இந்நிகழ்ச்சிகளைக் கண்டு பயனடைய முடியும் என்று நிருபர்கள் சந்திப்பில் கூறினார் கேரள முதல்வர். அரசு நடத்தும் கேபிள் டிவி ஏற்பாட்டின் மூலம் கல்விக்கான நிகழ்ச்சிகளை நடத்துவது நாடு முழுவதும் வரவேற்கத்தக்கதொரு முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.
கைட் (KITE- Kerala Infrastructure and Technology for Education) என்ற அமைப்பும் அம்மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் மற்றும் மாநில கல்வியியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து 2020-21ஆம் கல்வியாண்டை மெய் நிகர் வகுப்பறைகளைத் தொடர்ந்து நடத்துவதன் மூலம் செயல்படுத்த முனைந்துள்ளன. முதல் மணி (First Bell) என்ற பெயரில் இந்நிகழ்ச்சிகள் விக்டர்ஸ் என்கிற யூடியூப் சேனல் மூலமாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 1-12 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு நாள்தோறும் கால அட்டவணைப்படி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அதிலுள்ள நிகழ்ச்சிகளைக் குழந்தைகள் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்திக் கொள்ளமுடியும். அக்சையா வள மையங்கள் குறிப்பிடத்தக்க மற்றொரு ஏற்பாடாக உள்ளது. மாநில அரசுக்கும் மக்களுக்குமிடையே ஆரோக்கியமான பல செயல்பாடுகளைக் கொண்டு செல்லும் விதமாக இத்தகைய மையங்களை உள்ளூர் மட்டத்தில் உருவாக்கி வைத்துள்ளனர்.
இந்த பரீட்சார்த்த வகுப்புகளை நடத்த வேண்டும் என்று முடிவு செய்த அரசு அடுத்துச் செய்த உடனடிப் பணி, ஓர் ஆய்வு. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் எந்தெந்த குழந்தைகள் வீடுகளில் தொலைக்காட்சி இல்லை, இணையதள வசதியில்லை என்கிற விபரங்கள் சேகரிக்கப்பட்டன.கிட்டத்தட்ட இரண்டரை இலட்சம் குடும்பங்களில் இந்த வசதிகள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.இது மொத்த மாணவர்களில் 6% ஆகும். 2018ல் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில் 93% மக்களைத் தொலைக்காட்சி வசதிகள் சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
மே இறுதியில் பேட்டியளித்த பள்ளிக்கல்வி அமைச்சர் சி.இரவீந்திரநாத், ஜூன், 1ஆம் தேதி அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. ஆனால் கொரானா பெருந்தொற்று காரணமாக ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிகளுக்குச் செல்லமுடியாத சூழல் நிலவுவதால் அரசு பல்வேறு விதமான மாற்று வழிமுறைகளை யோசித்தது. அவற்றில் ஒன்று தான் இந்த மெய் நிகர் வகுப்பறைகள். மார்ச் மாதம் முதலாகவே ஆசிரியர்களிடையே இதற்கான பயிற்சி, அனுபவம் உள்ளவர்களைத் தேடி சுமார் 82000 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். முதல்வாரம் பரீட்சார்த்த ஒளிபரப்பே. இந்த வசதி கிடைப்பதில் என்னென்ன சிரமங்கள் உள்ளன என்கிற விபரங்களையும் மக்களின் முழுமையான பங்கேற்பையும் வலியுறுத்துகிறோம் என்றார்.
உடனடியாக, மாநிலத்தில் உள்ள பல்வேறு முற்போக்கு இயக்கங்களும் களத்தில் இறங்கின. அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அரசியல் கட்சிகள், அந்தந்தப் பகுதி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் என அனைவரும் துணைநின்றனர்
. தொலைக்காட்சி வசதிகள் இல்லாத குடும்பங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் வழங்கினர். சமூகப் படிப்பு மையங்கள் வாய்ப்புள்ள இடங்களில் துவங்கப்பட்டன. இன்னும் மிகவும் உள்ளடங்கிய பகுதிகளில் வசிக்கும், மின்சார வசதி மற்றும் தொலைக்காட்சி ஏற்பாடு இல்லாத குழந்தைகளுக்கு அங்கு இருக்கக்கூடிய நூலகங்களை ஏற்பாடு செய்தனர். நூலகங்கள் உண்மையான மக்கள் அறிவு மையங்களாக மாறின.
. தொலைக்காட்சி வசதிகள் இல்லாத குடும்பங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் வழங்கினர். சமூகப் படிப்பு மையங்கள் வாய்ப்புள்ள இடங்களில் துவங்கப்பட்டன. இன்னும் மிகவும் உள்ளடங்கிய பகுதிகளில் வசிக்கும், மின்சார வசதி மற்றும் தொலைக்காட்சி ஏற்பாடு இல்லாத குழந்தைகளுக்கு அங்கு இருக்கக்கூடிய நூலகங்களை ஏற்பாடு செய்தனர். நூலகங்கள் உண்மையான மக்கள் அறிவு மையங்களாக மாறின.
ஆனாலும் இது வழக்கமான வகுப்பறைக் கல்விக்கு ஒரு போதும் மாற்றாக அமைய முடியாது. இந்த சுகாதாரப் பேரிடர் காலத்தில் குழந்தைகளைக் கல்வியோடு தொடர்பில் வைப்பதற்கான ஒரு தற்காலிக ஏற்பாடே ஆகும். எவ்வளவு சீக்கிரம் நிலைமைகள் சரியாகின்றனவோ அவ்வளவு சீக்கிரம் பள்ளிகளைத் திறக்க அரசு முயற்சிக்கும் என்கிற புரிதலோடு இந்தப் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இணையப் பாகுபாடு என்பது மக்களிடம் இணைய வசதியின்மை, அதற்கான கருவிகளின்மை, போதிய அளவு இணைய வேகம் இன்மை, கருவிகளைக் கையாளத் தெரியாமை என சமூக,பொருளாதார, கலாச்சார மற்றும் பிராந்திய வேறுபாடுகளை எல்லாம் மனதில் கொண்டு அணுகவும் தீர்க்கவும் வேண்டிய சிக்கலாகவும் முன்வைக்கப்படுகிறது. இணையவழியில் பாடம் கற்பிக்கும் பெண் ஆசிரியர்களை ஸ்கிரீன்சாட் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வது போன்ற சைபர் குற்றங்களும் இல்லாமல் இல்லை.
கேரளாவின் இம்முயற்சிகளிலிருந்து, இணைய வசதி, நவீன போன்கள் இல்லாமல் தொலைக்காட்சியின் மூலம் ஒளிபரப்புவது, அதனையும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கச் செய்யும் விதமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், பொது படிப்பு மையங்கள், உள்ளூர் நூலகங்களையும் அறிவு மையங்களாக மாற்றியது, அக்ஷையா வள மையங்கள் போன்ற மையங்கள் மூலம் கல்விப் பரவலாக்களில் உள்ளூர்ச் சமூகத்தின் பங்கேற்புடன் அமலாக்குவது போன்றவை நிச்சயம் பிற அனைத்து மாநிலங்களும் பின்பற்றக்கூடிய நல்ல அனுபவங்களாகவே தெரிகின்றன.. (நன்றி: இந்தியன் கல்ச்சுரல் போரம்.இன் இணையதளத்தில் முகுலிகா அவர்கள் எழுதிய கட்டுரை)
– தேனி சுந்தர்
No comments:
Post a Comment