வனத்துறையின் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரண நிதியும், அரசு வேலையும் அளிக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த அணைக்கரை முத்து தனது நிலத்தைச் சுற்றி உரிய அனுமதி பெறாமல் மின்வேலி அமைந்திருந்தாா். இதுதொடா்பாக அவரை வனத் துறையினா் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, நீதித் துறை நடுவா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவா் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்த அணைக்கரைமுத்து குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி அளிக்கப்படும் என்று தனது உத்தரவில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment