2019 – 20 ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோர், வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, 2019 -20 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த அவகாசம் தற்போது நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கால நீட்டிப்பு வழங்கப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இந்த அவகாசம் தற்போது நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கால நீட்டிப்பு வழங்கப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment