அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணிணி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக் கலை, வாழ்வியல் திறன் போன்ற பாடப்பிரிவுகளுக்காக 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் மாதம் ரூபாய் 5 ஆயிரம் தொகுப்பூதியம் பெற்று வந்த இவர்கள் தற்போது 7 ஆயிரத்து 700 மட்டுமே ஊதியமாக பெற்று வருகின்றனர்.
தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு இனி வரும் நாட்களில் 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்கபடும் என 2011 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா சட்டப் பேரவையில் உறுதி அளித்தார்.
இந்தநிலையில் கொரானா நோய் பெருந்தொற்று காரணமாக பகுதிநேர ஆசிரியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்பது மாதங்கள் ஊதிய பாக்கியை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
10 ஆண்டுகளாக பணிபுரியும் தங்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடுவது அதிர்ச்சி தருவதாகவும் ஊரடங்கு காலத்தில் கூட மே மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஜூலை மாதத்திற்கான சம்பளம் விரைவில் வழங்கப்படும் என்றும், கொரோனா பாதிப்பு உள்ள சூழலில், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சம்பளம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment