அண்மைக் காலமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அரசு பள்ளிகள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே இனி அரசு வேலை என்று சட்டத்தை கொண்டு வரவேண்டும் என ஜார்க்கண்ட் மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது ;தனியார் பள்ளிகளில் படித்து விட்டு அரசு பணிக்கு மக்கள் செல்வது நியாயமில்லை. அரசு வேலை வேண்டும் என்றால் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்ட பின்னர் சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு பள்ளிகளில் படித்து வரும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மாதந்தோறும் அரசு செலவழிக்கிறது. ஆகையால் சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் அதிகம் பேர் வருகின்றனர். இது அரசுக்கு கிடைத்த வெற்றி என்று கூறி உள்ளார்
No comments:
Post a Comment