கரோனா வைரஸ் தமிழகத்தை பாதிக்கத் தொடங்கிய காலத்தில் சென்னை மாநகர்தான் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்தது. ஈரோட்டில் சில பேர் பாதிக்கப்பட்டனர்.
ஆனால், அதன் பிறகு கோயம்பேடு சந்தைக்கு வந்து சென்றோர், சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பியோர் எனப் படிப்படியாக தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கரோனா தொற்று பரவத் தொடங்கியது.
இதனால், தற்போது குறிப்பாகத் தென் மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வாரத் தரவுகளின் அடிப்படையிலான மொத்த பாதிப்பு மற்றும் தென் மாவட்டங்களின் பாதிப்பு பட்டியல்:
தேதி | தமிழகம் மொத்த பாதிப்பு | தென் மாவட்டங்கள் * பாதிப்பு மட்டும் |
23.07.2020 | 6,472 | 1,840 |
24.07.2020 | 6,785 | 1,806 |
25.07.2020 | 6,988 | 1,796 |
26.07.2020 | 6,986 | 1,549 |
27.07.2020 | 6,993 | 1,700 |
28.07.2020 | 6,972 | 2,235 |
29.07.2020 | 6,426 | 1,661 |
பொதுமுடக்கத் தளர்வுகளைப் பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தென் மாவட்டங்களில் பரவும் கரோனா அச்சமூட்டுவதாக இருக்கிறது. இதனால், நிலைமை பின்னடைந்துவிடுமோ என்றும் மக்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment