'
'தமிழகத்தில், அரசு பள்ளிகளில் நடப்பாண்டில், இரண்டு லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூரில், அவர் அளித்த பேட்டி:
கொரோனா தொற்று தாக்கம் குறைந்த பின்பே, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்பது குறித்து, அரசு சிந்திக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆக., 3 முதல், 14 தனியார், 'டிவி' சேனல்கள் மூலம், பாடங்கள் கற்பிக்க முடிவு செய்துள்ளோம். மத்திய அரசு அறிவித்துள்ள, புதிய கல்விக் கொள்கை குறித்து, முதல்வர் தான் நடவடிக்கை மேற்கொள்வார்.
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து, முதல்வர் மூலம் அட்டவணை வெளியிடப்படும். தமிழகத்தில், அரசு பள்ளிகளில், நடப்பாண்டு, இரண்டு லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment