1. அஞ்சலித் தீர்மானம் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு கடந்த ஜனவரி 2017 ல் துவங்கப்பட்ட நாள் முதல் மேற்கொண்ட அனைத்துப் போராட்ட இயக்க நடவடிக்கைகளில் நமது அமைப்பினை முழுமையாக ஈடுபடுத்தி , தனது எண்பதாண்டு கால இயக்க அனுபவ முதிர்ச்சியோடு செயல்பட்டு , இன்று நம்மைவிட்டு பிரிந்து சென்றுள்ள மூத்த தோழர் பாவர் கா . மீனாட்சி சுந்தரம் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது . மேலும் , கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோருக்கும் இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் நாட்டுக்காக இன்னுயிரினை நீத்த இந்திய இராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது .
2 ) கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற காலவரையற்றப் போராட்டம் முடிவுக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் அந்தப் போராட்ட காலத்தில் குற்றக் குறிப்பாணைகள் , காவல் துறை வழக்குகள் , பணியிட மாறுதல்கள் , பதவி உயர்வு மறுப்பு , ஆண்டு பாதிய உயர்வு மறுப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கு உள்ளான 5100 ஆசிரியர்கள் அரசு வாழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை இரத்து செய்யவும் , கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாக ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழுத் தலைவர்கள் பேட்ரிக் ரெய்யாண்ட் , ரவிச்சந்திரன் ஆகியோர் மீது புனையப்பட்டுள்ள 17 பி குற்றச்சாட்டுகளை இரத்து செய்ய வலியுறுத்திம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு பலமுறை கோரிக்கை மனுக்களை ஜாக்டோ ஜியோ வாயிலாக சமர்ப்பித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத பின்னணியில் , நடவடிக்கைகளை இரத்து செய்ய வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
3 ) எதிர்வரும் 29.07.2020 புதன்கிழமை அன்று பாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் , மாண்புமிகு அமைச்சர்கள் , தலைமைச் செயலாளர் , துறைச் செயலாளர்கள் ஆகியோரிடமும் கல்வித் துறை / கல்லூரி கல்வித் துறை இயக்குநர்களிடம் கோரிக்கை மனுவினை அளிக்க உள்ளனர் .
4 ) 29.07.2020 புதன்கிழமை அன்று மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சித் தலைவர் , மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது .
5 ) ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் 27.07.2020 அன்று மாவட்டத்திலுள்ள உயர்மட்டக் குழுத் தலைவர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தினை தனி மனித இடைவெளியோடு நடத்தி , 29.07.2020 அன்று நடைபெறவுள்ளா இயக்கத்திற்கு திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
No comments:
Post a Comment