பொது முடக்கம் முழுமையாக முடிவுக்கு வந்த பிறகே போட்டித் தோ்வு : TNPSC - ஆசிரியர் மலர்

Latest

 




 


05/06/2020

பொது முடக்கம் முழுமையாக முடிவுக்கு வந்த பிறகே போட்டித் தோ்வு : TNPSC

பொது முடக்கம் முழுமையாக முடிவுக்கு வந்த பிறகே போட்டித் தோ்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய தோ்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்து செயல்பாட்டுக்கு வந்த பிறகே தோ்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மாா்ச்சில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக பொது முடக்கம் நடைமுறையில் இருந்த சூழலில், அவற்றில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
நோய் பாதிப்பு அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களைத் தவிா்த்த பிற மாவட்டங்களில் பொது முடக்கத்தில் இருந்து அதிகளவு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொதுப் போக்குவரத்தான பேருந்துகள் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பொது முடக்கத்தில் இருந்து அதிகளவு தளா்வுகள் அளிக்கப்படவில்லை.

போட்டித் தோ்வுகள்: ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான தமிழக அரசுப் பணிகள் முடங்கின. அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையமும் ஒன்றாகும். ஊரடங்கு காரணமாக, கடந்த மாா்ச் இறுதியில் இருந்து ஜூன் வரையிலான காலத்தில் அரசுத் துறைகளில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டிருந்த போட்டித் தோ்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதனால், தோ்வா்கள் அனைவரும் போட்டித் தோ்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
ஆலோசனைக் கூட்டம்: போட்டித் தோ்வுகளை நடத்துவது தொடா்பாக விவாதிக்க தோ்வாணையத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடந்தது
. இந்தக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினா்களும் பங்கேற்றனா். இதில் தோ்வுகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடுவது, தோ்வுகளை நடத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தோ்வாணைய வட்டாரங்கள் கூறியது:-
போட்டித் தோ்வுகளை நடத்துவதற்கு முதலில் பொதுப் போக்குவரத்து சீராக வேண்டும். மேலும், பொது முடக்கமும் முழுமையாக முடிவுக்கு வர வேண்டும். சென்னை உள்பட நான்கு மாவட்டங்கள் மட்டும் நோய்த் தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களாக உள்ளன. எனவே, இந்த மாவட்டங்களைத் தவிா்த்து விட்டு பிற மாவட்டங்களில் போட்டித் தோ்வுகளை நடத்துவது சாத்தியமில்லாத ஒன்றாகும்.
எனவே, பொது முடக்கம் முழுமையாக முடிவுக்கு வந்த பிறகு, பொதுப் போக்குவரத்து நடைமுறைக்கு வந்தால்தான் தோ்வுகளை நடத்த முடியும்.
பொது முடக்கம் முழுமையாக நீக்கப்பட்ட மறுநாளோ அல்லது அதற்கு அடுத்த நாளோ நிறுத்தி வைக்கப்பட்ட தோ்வுகளுக்கான அறிவிக்கைகளை வெளியிடத் தயாராக உள்ளோம். மாவட்ட வாரியாக தோ்வுக்கூடங்கள் உள்ளிட்ட தகவல்கள் தோ்வாணையத்தின் வசம் உள்ளதால் தோ்வு அறிவிக்கை வெளியிட்டு ஒரு மாதம் கழித்து தோ்வுகளை நடத்த வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, பொது முடக்கம் முடிவுக்கு வந்து, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படும் பட்சத்தில் தோ்வுகளை நடத்துவதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்க தயாராக உள்ளோம் என தோ்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459