கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 17-ஆம் தேதி தொடங்கிய விடுப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாம் இடம் இருப்பதால் இப்போதைக்கு தேர்வை நடத்தக் கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
No comments:
Post a Comment