உபரி ஆசிரியர் விபரம் தாக்கல் செய்ய பள்ளிகளுக்கு கெடு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


30/06/2020

உபரி ஆசிரியர் விபரம் தாக்கல் செய்ய பள்ளிகளுக்கு கெடு!


பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை விகிதத்துக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களின் பட்டியலை, வரும், 5ம் தேதிக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்ட விதிகளின் படி, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றும், ஒரு பாடத்துக்கு ஒரு ஆசிரியர்என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் பணியாற்றும் கூடுதல் ஆசிரியர்களை, மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிகளுக்கு மாற்ற, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் .இந்த நடவடிக்கையை மேற்கொள்ள, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர் விகிதத்தை கணக்கிட்டு, பட்டியல் சேகரிக்கப்படுகிறது.இதில், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மட்டும், கூடுதலாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் பட்டியலை, பள்ளிகள் தாக்கல் செய்யவில்லை.

எனவே, வரும், 5ம் தேதிக்குள் உபரி ஆசிரியர் பணியிடங்களை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு,சம்பளம் வழங்கப்படாது என, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459