கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகளை குறித்த காலத்திற்குள் திறக்க முடியவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, பல்வேறு பள்ளிகள், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தொடங்கி உள்ளன. இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
குறிப்பாக ஆன்லைன் வகுப்புகள் வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்றும்,
ஏழைகளுக்கு சாத்தியம் இல்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
ஏழைகளுக்கு சாத்தியம் இல்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் வகுக்கும் திட்டம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஆன்-லைன் வகுப்புகள் நடத்துவதற்கான விதிமுறைகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை வகுத்துள்ளது. முதலமைச்சரின் ஒப்புதலுக்கு விதிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஒப்புதல் அளித்ததும், விரைவில் அரசாணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment