ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கு: : மருத்துவர் அறிக்கை வழங்க உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/06/2020

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கு: : மருத்துவர் அறிக்கை வழங்க உத்தரவு

சென்னை,
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த விதிகளும் வகுக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புக்களை முறைப்படுத்துவதற்கு விதிகள் வகுப்பது தொடர்பாக உள்துறை மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கருத்துக்களை பெற்று தெரிவிக்க, 2 வார கால அவகாசம் வழங்கவேண்டும் எனக்கோரிக்கை விடுத்தார்.
அதேபோல், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மாணவர்களின் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய அனைத்து வழக்குகளையும் ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459