ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/06/2020

ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு


பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டது.இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. ஆன் லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவர்களின் கவனம் சிதைகிறது. 
எனவே அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்க வேண்டும். அதுவரை ஆன் லைன் மூலம் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும்
.தமிழகத்தில் 8 சதவீத  வீடுகளில் மட்டுமே இணையதள இணைப்புடன் கூடிய கணினி வசதி உள்ளது.ஆன்லைன் முறையில் பாடம் நடத்துவதால் நகர்புற,  கிராமப்புற மற்றும் ஏழை பணக்கார மாணவர்களுக்கு இடையே சமநிலையற்ற நிலை உருவாகியுள்ளது. மேலும் முறையான ஆன்லைன் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் சவால்களையும், இடையூறுகளையும் சந்திக்கின்றனர். 

எனவே மாணவ மாணவிகள் ஆபாச இணையதளங்களை  பார்ப்பதை தடுக்கும் வகையில், சட்ட விதிகளின்படி, முறையான விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459