பணிபுரியும் பள்ளியிலேயே தேர்வு பணி ஈடுபடக்கூடாது - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/06/2020

பணிபுரியும் பள்ளியிலேயே தேர்வு பணி ஈடுபடக்கூடாது


பணிபுரியும் பள்ளியிலேயே ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடக்கூடாது என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பணிபுரியும் பள்ளியிலேயே ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடக்கூடாது என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை:
பொதுத்தேர்வையொட்டி கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* மாணவர்கள் தேர்வு எழுதக்கூடிய விடைத்தாள்கள் அனைத்தும் முதன்மை தேர்வு மையங்களிலேயே பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்
. இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
* நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் அவர்களின் வசதிக்காக வட்டாரத்துக்கு 2 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கவேண்டும்.
* கல்வி மாவட்டம் மற்றும் வட்டார அளவில் ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அருகில் உள்ள பிற பள்ளியில் தேர்வு பணியாற்றிட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே தேர்வுபணியில் ஈடுபடக்கூடாது.
* தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் அனைவரும் வருகிற 8-ந்தேதிக்குள் தாங்கள் பணிபுரியும் பள்ளி அமைந்து இருக்கும் மாவட்டத்துக்குள் வந்துவிட்டார்களா? என்பதை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
* வெப்பநிலை பரிசோதனை கருவியை தேர்வு மையங்களாக உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி பெற்றோர் ஆசிரியர் நிதியில் இருந்தோ அல்லது பள்ளியின் வேறு வகையான நிதியில் இருந்தோ வாங்கி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
. * தேர்வு மையங்களாக அமைக்கப்பட்ட ஒரு சில பள்ளிகள் நோய்த்தடுப்பு முகாமாக செயல்படுவதன் காரணமாக அல்லது ஒரு தேர்வறைக்கு 10 மாணவர்கள் அமரவைப்பதால் ஏற்படும் இடப்பற்றாக்குறை காரணமாக சில தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதனை அதிகாரிகள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459