சமீபத்தில், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கு அதிரடி தடை விதித்துள்ளது கர்நாடகா அரசு. `ஆன்லைன் வகுப்புகளுக்காக ஆண்ட்ராய்டு, லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் பொருள்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது குழந்தைகளின் உடல்நலன் பாதிக்கப்படும்.
இதன் காரணமாகவே ஆன்லைன் வகுப்புகளை ரத்துசெய்கிறோம்’ என்று விளக்கமும் அளித்துள்ளது அம்மாநில அரசு.
தற்போது 2020-2021 கல்வியாண்டு தொடங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எல்.கே.ஜி குழந்தைகளில் தொடங்கி கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்திருக்கின்றன பல தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும்.
ஆண்ட்ராய்டு போன், லேப்டாப் வழியே கூகுள் ஹேங்அவுட் (Google Hangouts), கூகுள் மீட் (Google Meet) போன்ற வீடியோ மீட்டிங் ஆப்களின் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள் மாணவர்கள். தனியார் பள்ளிகளைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன.
“ குழந்தைகளின் மனநிலையை வெகுவாக பாதிக்கும். கேட்ஜெட் வசதியற்ற வீடுகளில் உள்ள ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாது
. ஆன்லைன் வகுப்புகளை காரணம்காட்டி தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் அதிகப் பணம் வசூல் செய்கின்றன” போன்ற காரணங்களை வலியுறுத்தி சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் இந்த வகுப்புகளைத் தடைசெய்யக் கோரியுள்ளனர்.
. ஆன்லைன் வகுப்புகளை காரணம்காட்டி தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் அதிகப் பணம் வசூல் செய்கின்றன” போன்ற காரணங்களை வலியுறுத்தி சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் இந்த வகுப்புகளைத் தடைசெய்யக் கோரியுள்ளனர்.
ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளின் மனநிலை மட்டுமல்ல, உடல்நிலையும் மோசமடையும். குறிப்பாக இந்த வகுப்புகளுக்காகத் தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் மொபைல், போன்றவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, மாணவர்களின் கண்கள் அதிகம் பாதிக்கப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இதுகுறித்து கண் மருத்துவர் சரவணனிடம் பேசினோம்.
“தொடர்ந்து மணிக்கணக்கில் மொபைல், லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தும்போது, அந்த கேட்ஜெட்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளால் கண்கள் வெகுவாக பாதிக்கப்படும். முக்கியமாக, கண்களில் உள்ள விழி வெண்படலமும் (Cornea), சிலியரி தசைகளும் (Ciliary muscle) பாதிப்படைகின்றன. சாதாரணமாக நாம் ஒரு நிமிடத்திற்கு 10-15 முறை கண் சிமிட்டுவோம். ஆனால் மொபைல் பார்த்துக்கொண்டிருக்கும்போது கண் இமைக்கவே மறந்துவிடுவோம். இரண்டு மூன்று நிமிடங்கள்கூட கண் இமைக்காமல் கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்போம்.
இதுபோன்ற நேரத்தில், கண்ணின் விழி வெண்படலத்திற்கு மேலுள்ள ஈரப்பதம் வறட்சியடைகிறது. இதனால் கண்களில் எரிச்சல், அழுத்தம், வலி ஏற்படும்.
கண்கள் சிவந்து தலைவலியும் ஏற்படலாம்.
இதுபோன்ற நேரத்தில், கண்ணின் விழி வெண்படலத்திற்கு மேலுள்ள ஈரப்பதம் வறட்சியடைகிறது. இதனால் கண்களில் எரிச்சல், அழுத்தம், வலி ஏற்படும்.
கண்கள் சிவந்து தலைவலியும் ஏற்படலாம்.
குழந்தைகள் அதிக நேரம் லேப்டாப், மொபைலைக் கூர்ந்து நோக்கி பாடங்களைக் கவனிக்கும்போதும், மொபைலைப் பார்த்து பாடங்களை நோட்டில் எழுதும்போதும் அந்த கேட்ஜெட்ஸ் வெளியிடும் கதிர்வீச்சுகளால் குழந்தைகளின் பார்வைத்திறன் பாதிக்கப்படலாம். அவர்கள் கண்ணாடி அணியும் நிலையும் ஏற்படலாம். குழந்தைகள், தொடர்ந்து கேட்ஜெட்ஸை பார்த்துக்கொண்டே இருக்கும்போது தலைவலி, கண் எரிச்சல், சோர்வு, கவனச்சிதறலும் ஏற்படும்.
இந்த பாதிப்புகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க, தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை எடுக்காமல் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் 5 அல்லது 10 நிமிடம் இடைவேளை தரப்பட வேண்டும். இந்த இடைவேளையில் குழந்தைகளை மொபைல், தொலைக்காட்சி போன்ற கேட்ஜெட்ஸை பயன்படுத்தச் சொல்லாமல் மரம், செடி, கொடிகள் நிறைந்த பசுமையான இடங்களைப் பார்க்கவைக்கலாம்.
வெகுநேரம் குறுகிய தொலைவில் ஏதேனும் காட்சிகளைப் பார்க்கும்போது கண்களின் சிலியரி தசைகள் பாதிக்கப்படும். இதனால் குறுகிய தொலைவில் கேட்ஜெட்ஸ் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகளைச் சிறிது நேரம் ஜன்னலுக்கு வெளியே நீண்டதூரத்தில் உள்ள இடங்களை பார்க்கச் சொல்லலாம்.

மொபைல், ஐபேட், லேப்டாப் போன்றகளை குறைந்தபட்சம் 30 சென்டி மீட்டர் தொலைவில் வைத்துதான் பார்க்க வேண்டும். இவற்றை அதிக வெளிச்சத்திலோ அல்லது மிகவும் குறைவான வெளிச்சத்திலோ வைத்துப் பார்க்காமல் மீடியமான வெளிச்சத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும்
.
.
நிறைந்த உணவுகள் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லவை. மாம்பழம், கேரட், பப்பாளி, திராட்சை, கீரை வகைகளைத் தினமும் குழந்தைகளின் உணவில் சேர்க்கலாம். வாரத்திற்கு இரண்டு முறையாவது மீனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
குழந்தைகளின் கண்களில் ஏதேனும் அலர்ஜி, வீக்கம், வலி போன்றவை ஏற்பட்டால், உடனடியாக கண் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
கண்ணாடி அணியவேண்டிய நிலை ஏற்பட்டால், தாமதப்படுத்தாமல் மருத்துவரின் பரிந்துரையின்படி உடனடியாக பொருத்தமான கண்ணாடியை வாங்கி அணியவேண்டியது அவசியம். கண்களில் வலி, எரிச்சல் ஏற்பட்டால் நீங்களாகவே மருந்தகங்களில் கண் சொட்டு மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்” என்றார் கண் மருத்துவர் சரவணன்.

No comments:
Post a Comment