மாற்று வகுப்பறைக்கு நூறு முகங்கள்: ஹீரோக்கள் தான் தேவை – தேனி சுந்தர் - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/06/2020

மாற்று வகுப்பறைக்கு நூறு முகங்கள்: ஹீரோக்கள் தான் தேவை – தேனி சுந்தர்


சஇந்த கொரனா காலகட்டத்தில் பல்வேறு பாதிப்புகள் இருந்தாலும் கல்வியில் பாதிப்பு என்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. கவலை நியாயமானது. ஆனால் கவலை மட்டும் போதுமா என்பது தான் கேள்வி. பள்ளிகளை உடனடியாகத் திறக்க முடியாது. எப்போது திறக்க வாய்ப்பு என்பது குறித்தும் ஆரூடம் கூற முடியாத நிலையாக இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் நாம் நிச்சயம் மாற்று குறித்து யோசிக்க வேண்டும். தற்போது சிட்டுக்கள் மையம் என்கிற மாற்று வகுப்பறைகள் குறித்து பெரும்பாலும் விவாதங்களும் அதையொட்டிய பல்வேறு முயற்சிகளும் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மகிழ்ச்சியானஆரோக்கியமான முன்னெடுப்பாககாலத்தே முன்வைக்கப்பட்டுள்ள நல்ல ஆலோசனையாக கல்வியாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். தொடர்ந்து ஆலோசனைகளையும் வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கன்னியாகுமரிகாஞ்சிபுரம்தேனிதிண்டுக்கல்,கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் சில முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. சின்னச் சின்னதாய் சில அடிகள் எடுத்து வைக்கப்பட்டு வருகின்றன. பெற்றோரின் மகிழ்ச்சியும் ஆதரவும் ஊக்கமளிப்பதாக நண்பர்கள் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் மிகுந்த ஆவலுடன் சிட்டுக்கள் மைய செயல்பாடுகளுக்கான பாடத்திட்டம் உருவாக்கி விட்டீர்களாநாங்கள் முதல் வாரத்தில் என்னென்ன மாதிரியான செயல்பாடுகளை குழந்தைகளுக்குக் கொடுப்பது என நமது வேகம் போதுமானதல்ல என்பதை உணர்த்துகின்றனர்.
இணையவழி வகுப்புக்கு மாற்று ...
இருந்தாலும் இன்னும் பலருக்கு பல்வேறு தயக்கங்கள் இருக்கின்றன. நூறு கேள்விகள் எழுகின்றன. அவற்றில் எதுவும் நியாயமற்றது என நாம் ஒதுக்கிவிட முடியாது. குழந்தைகளின் கல்வி தொடர  வேண்டும். அவர்களின் கற்றல் ஆர்வம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அதை வழக்கமான பள்ளிய நடைமுறைகளை அமலாக்கம் செய்வதற்கான வாய்ப்பாக மட்டுமே பயன்படுத்தி விடக்கூடாது என்பது மட்டும் தான் நமது ஒரே முன்நிபந்தனை. மற்றபடி மாற்று வகுப்பறைக்கு கட்டுதிட்டமான வரையறைகள் எதுவுமில்லை. களங்கள் நூறு விதம் என்றால் மாற்று வகுப்பறையின் முகங்கள் நூறு விதமாக அமைவதில் தப்பில்லை. அந்தந்தப் பகுதியின் வாய்ப்பும் சூழலும் பெற்றோர் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்புக்கும் தக்கவாறு அதிகபட்சமாகவும்குறைந்தபட்சமாகவும் இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வதில் தவறில்லை.  சூழல் தான் தீர்மானிக்கிறது.
கற்பிக்கும் பாடங்களில்கற்பிக்கும் முறைகளில் மட்டுமின்றி கற்றல் கற்பித்தல் நடைபெறும் இடங்களிலும் மாற்று அணுகுமுறைகளைப் பின்பற்றும் பல முன்னுதாரணங்கள் உண்டு. கல்வியாளர் ஆயிசா நடராசன் அவர்கள் எழுதியமிகப்பெரும் வரவேற்பு பெற்ற ஒரு நூல் – இது யாருடைய வகுப்பறை. தமிழில் கல்விக்கான என்சைக்கிளோபிடியா என்பார் பேரா.ச.மாடசாமி. அந்த நூலில் தோழர் ஆயிசா நடராசன் சில மாற்று வகுப்பறைகள் குறித்து பேசியிருப்பார். அவற்றை இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஆசிரியர்கள்பெற்றோர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
How classrooms look around the world — in 15 amazing photographs ...
மிதக்கும் வகுப்பறைகள்: “ஒரு பள்ளி என்பது பதினேழு தனித்தனி மிதக்கும் படகுகளால் ஆனது. நகரம் பெரும்பாலான மாதங்களில் நீரால் வெள்ளத்தால் மூழ்கும் போது அப்படித்தான் பள்ளிகள் இயங்க முடியும். நமது அந்தமானிலும் கேரளத்திலும் கூட அத்தகைய மிதக்கும் வகுப்பறைகள் உண்டு.. ”. என்கிறார் தோழர் ஆயிசா நடராசன். இதுமட்டுமின்றி வங்கதேசத்திலும் தொடர் வெள்ளப்பாதிப்புகளால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதால் மிதக்கும் வகுப்பறை ஏற்பாடுகள் உண்டு. நைஜிரியாகம்போடியாபிலிப்பைன்ஸ்வியட்நாம்ஜாம்பியா உள்ளிட்ட பல நாடுகளில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என தினமலர் நாளிதழ் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது..
ரயில் வகுப்பறைகள் : பாலஸ்தீனத்தில் அரசியல் யுத்த குண்டு மழையில் பள்ளிகள் தரைமட்டமான போது வகுப்பறை ஒரு ஓடும் ரயிலுக்கு இடம் பெயர்ந்தது. அதுவே அங்கு பிறகு நிலைத்து விட்டது. ரயில் நூலகம்ரயில் உணவகம் போல ரயில் பள்ளிக்கூடம்..
Milk: A1, A2 or entirely avoidable? - The Hindu
மேய்ச்சல் வகுப்பறைகள்: கல்வியில் மிகவும் பின் தங்கிய மாநிலமான பீகாரில் பள்ளி வயதுக் குழந்தைகளில் பெரும்பாலானோர் ஆடு, மாடு மேய்க்கும் வேலைக்குச் சென்று விடுவார்கள். என்னதான் முயன்றாலும் அவர்களை பள்ளியில் தொடர்ந்து தக்கவைக்க முடியவில்லை. அதற்காக அப்போதைய முதல்வர் லல்லுபிரசாத் யாதவ் முன்வைத்த மாற்று வகுப்பறை தான் மேய்ச்சல் வகுப்பறைகள். அந்தக் குழந்தைகள் ஆடு மாடு மேய்க்கும் மேய்ச்சல் நிலங்களுக்கே ஆசிரியர் தேவையான கல்வி உபகரணங்களை எடுத்துக் கொண்டு சென்று விடுவார். மாடு ஒரு பக்கம் மேய்ந்துகொண்டிருக்கும். பாட்டுவிளையாட்டு என பாடம் ஒருபக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும். மாடு கட்டும் கயிறு உட்பட அரசே கொடுத்திருக்கிறது. திட்டம் படுதோல்வி என்று பீகார் அரசே பின்னர் ஒப்புக்கொண்டது என்றாலும் துணிச்சலான புதிய முயற்சி பாராட்டப்பட வேண்டியது. இந்த வகை மேய்ச்சல் வகுப்பறைகள் பிலிப்பைன்ஸ்சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்குப் பிரபலமடைந்தது என்பதையும் யுத்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகின்ற பல ஆப்பிரிக்க நாடுகளிலும் இவ்வகை திறந்தவெளி வகுப்பறைகள் உள்ளன என்பதையும் ஆயிசா நடராசன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
7,000 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் ...
டிஜிட்டல் வகுப்பறைகள்: வகுப்பறை திரையரங்கமாகச் செயல்படும் இந்த வகை டிஜிட்டல் அதிசயம் இன்று குழந்தைகளின் பெரிய கவர்ச்சியாக உள்ளது. ஹாங்காங்கின் சைனீஷ் இண்டர்நேஷனல் பள்ளி தனது 1400 மாணவர்களுக்கும் மடிக்கணினி இலவசமாக வழங்கிவீட்டுப்பாடம்தேர்வுகள்செயல்திட்டம் என காகிதமற்ற கல்வி முறையைச் சாத்தியமாக்கி உள்ளது. சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள சில பள்ளிக் குழந்தைகள் டாப்லட் எனும் கைபேசியை விட சற்று பெரிதான நோட்டுப்புத்தகம் அளவிற்கு இருக்கும் ஒரு மின்னணு சிலேட் மட்டுமே பள்ளிக்கு எடுத்து வருகிறார்கள். கேரளத்தில் கல்வித்துறை உள்ளூர் அளவில் டி.வி. தனி சானலை கல்விக்காகப் பயன்படுத்துகிறது..” என்கிறார் ஆயிசா நடராசன்.
வகுப்பறையில் ஒய்வு நேரத்தில் ...
உற்பத்தி வகுப்பறை : “கியூபாவில் பள்ளிக்கூடம் என்பதே வகுப்பறைகளையும் பட்டறைகளையும் கொண்டுள்ளது. அங்கே பள்ளி என்பது கற்றலாகவும் அதே சமயம் தேசிய உற்பத்தியில் பங்கேற்பதாகவும் உள்ளது. அந்தந்த உள்ளூர் தொழில் உற்பத்தியின் ஏதாவது ஒரு அம்சத்தில் பள்ளியின் வகுப்பறை தனது கல்வி போதனைக் காலம் முடிந்ததும் குறைந்தபட்சம் இரண்டரை மணி நேரம் 13 வயது தாண்டிய மாணவர்களின் தேசியச் சேவையாக உற்பத்திப் பங்கேற்பை பள்ளியிலேயே நடைமுறைப்படுத்தப் படுகிறது. மிகவும் அடிக்கடி இயற்கைச் சீற்றத்திற்கு உட்படும் கியூபா தனது குழந்தைகளைத் தேசிய பேரிடர் மேலாண்மைப் பயிற்சியில் நேரடியாக ஈடுபடுத்துகிறது. பள்ளிக்கூடங்கள் எனும் கட்டிடம் குழந்தைகள் மிகவும் விரும்பிப் போகும் வகுப்பறை மட்டுமல்ல. பேரிடர் தடுப்புக் காலங்களில் ஊர்ப் பாதுகாப்பு அரணாகவும் அறுவடைக்காலங்களில் ஊர் உற்பத்தி சேகரிப்புக் களனாகவும் ஒருங்கே செயலூக்கம் பெறுவது அவற்றின் முக்கியத்துவத்தைச் சமூகத்தில் கூட்டுகின்றன.
ஒரு ஆசிரியரின் பணி மாணவர்கள் ...
ஜிம்னாசிய வகுப்பறை: தனித்தனி வகுப்பறையே இல்லாத ஒரு பள்ளிக்கூட நடைமுறை. இது இருப்பது டென்மார்க் நாட்டில். யாரும் யாருடனும் இணைந்து கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடலாம். வளாகம் முழுக்க வைஃபை வசதி. விரும்பிய பாடத்தை பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம். தேவையென்றால் மட்டும் ஆசிரியரைத் தொடர்பு கொள்ளலாம் . இந்தக் குழந்தைகளெல்லாம் எங்க உருப்படப் போகுது என்கின்ற உங்களது மனதின் குரல் எனக்கு கேட்காமல் இல்லை. உலக கல்வித்தர வரிசையில் டென்மார்க் இரண்டாவது இடம் வகிக்கிறது. மகிழ்ச்சியான குழந்தைகளின் தரவரிசையில் டென்மார்க் குழந்தைகள் தான் முதலிடம். இரவும் பகலும் தங்களது கல்வி அக்கறை எனும் பெயரில் குழந்தைகளை வாட்டி வதைக்கும் நமது இந்தியத் திருநாடு இந்த இரண்டு தரவரிசைகளிலும் முறையே 96 மற்றும் 116வது இடங்களில் இருக்கிறது என்ற தகவலையும் பதிவு ஆயிசா நடராசன் செய்துள்ளார்.
Andhimazhai - அந்திமழை - வகுப்பறை வாசனை - 1 ...
கழுதைகள் சுமந்த வகுப்பறை: தோழர் ச.மாடசாமி அவர்களின் வித்தியாசம் தான் அழகு என்கிற நூல் அகரம் பவுண்டேசன் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான கதைகளும் பெரியவர்களுக்கான நீதிகளும் என்ற அடிக்குறிப்போடு வெளிவந்துள்ள இந்நூலில் 16வது அத்தியாயத்தின் தலைப்பு கழுதைகள் கொண்டு வந்த கதைகள்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியா 1990களில் உள்ளூர்க் கலவரங்களால் மிகவும் சிதைந்திருந்த நேரம். சாலை, மருத்துவம், பள்ளி, கல்வி என அனைத்தும் துண்டிக்கப்பட்டுக் கிடந்தன மலைக்கிராமங்கள். அந்த மலைக்கிராமங்களின் குழந்தைகளுக்காக தனது இரு கழுதைகள் மூலம் புத்தகங்களைச் சுமந்து சென்று கல்வி கொடுக்கிறார் ஒரு ஆசிரியர். ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடாது தொடர்ந்த அந்த மலைப் பயணங்களில் பல சிரமங்கள். தடைகள். இருந்தாலும் தொடர்கிறார். ஒரு முறை தவறி விழுந்து தனது ஒரு காலையும் இழக்கிறார். செயற்கைக்கால் பொருத்திக் கொண்டு மேலும் தொடர்கிறார் சொரியான். ஆம், அவர் பெயர் சொரியான். ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர். தோழர் மாடசாமி அவர்களே சொல்வது போல அதிகம் பேசப்படாத, அதிகம் கவனிக்கப்படாத ஒரு ஹீரோ.. அந்த அத்தியாயத்தின் இறுதியில் தோழர் மாடசாமி  சொல்கிறார், “புத்தகங்களுக்காக ஏங்கும் கைகள் எங்கெங்கோ இருக்கின்றன. சிறு குன்றுகளில், காட்டோரக் குடியிருப்புகளில், கடலோரக் கிராமங்களில் என நாம் அதிகம் பார்க்காத, பயணப்படாத இடங்களில் எல்லாம் குழந்தைகள் புத்தகங்களுக்காக காத்திருக்கிறார்கள்.. மலைப் பயணத்தில் சளைக்காமல் நடந்த கழுதைகளும் பயணத்தில் தனது ஒரு காலை இழந்த ஆசிரியர் சோரியானாவும் அந்தக் கைகளை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்..” என்று முடிக்கிறார்..
ஆமாம், இன்றைய கொரனா காலச் சூழலில் மாற்று முன்னெடுப்புகளுக்கான முயற்சிகளும் அதைச் செய்வதற்கான சொரியானா போன்ற ஹீரோக்களும் தான் தேவை..
குழந்தைகளின் கல்விக்காக களமிறங்க உள்ள அனைவரும் ஹீரோக்கள் தான்.. அடி மேல் அடி வைப்போம் . பாதை பிறக்கும்.
–    தேனி சுந்தர்

1 comment:

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459