ஆன்லைன் வகுப்பு பற்றி ஒரு அம்மாவின் கதறல்...வாட்ஸ் அப்
தகவல்..
📌ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம்னு மெசேஜ் வந்த போது இவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொள்ளு வோம்னு எதிர்பாக்கலை. முதல் சிக்கல் எங்களிடம் கணினி, சொந்த லாப்டாப் போன்ற விசயங்கள் இல்லை. செல்போன்கள் மட்டுமே. அதை வச்சு சமாளிக்கலாம்னு ஒரு கணக்கு போட்டோம். ‘ஜியோ’ இருக்க பயமேன்னு அம்பானிய வேற நம்புனோம். ஆனா, டைம் டேபிள் பாத்ததும் தலை சுத்திருச்சு..
காலை எட்டு மணி முதல் மதியம் மூன்று வரை மாறி மாறி வகுப்புகள்.
எங்களின் ஆரம்ப கட்ட சந்தேகங்கள்:-
நாங்கள் வேலைக்கு எப்படி போவது? குழந்தைகள் கூடவே இருப்பது சாத்தியமா?
📌 திடீரென இருபதாயிரம் செலவு செய்து லாப்டாப் வாங்கணுமா? அதுவும் இரு குழந்தை களுக்கு என்ன செய்ய? ஆன்லைன் வகுப்புகள் எத்தனை நாட்கள் இருக்கும் எனும் தெளிவும் இல்லை. இருந்தால் வாடகைக்கு வாங்கலாம்.
📌இத்தனை எலக்ட்ரானிக் டிவைசுகளை சார்ஜர்களுடன் குழந்தைகளை நம்பி விட்டு விட்டு எப்படி தைரியமாக வேலைக்கு செல்வது? இதெல்லாம் முதல்கட்ட சிக்கலாக இருந்தது. மிகுந்த குழப்பநிலை. சரி விதிவழி வாழ்க்கை என ஒரு டேப் வாங்கலாம் என நினைத்தோம்.புதுசு எங்கும் ஸ்டாக் இல்லை என ரிச்சி தெரு கைவிரித்தது. வேறு வழியின்றி 1 ஜிபி ரேம் கொண்ட செகண்ட் ஹாண்ட் டேப் வாங்கி னோம்.அதன் வேகம் ஆகா...! சொல்லி மாளாது.
அடுத்தது ஒரு புளூடூத் ஹெட்செட் வாங்கி னோம். அவரோட அலுவல்களுக்காக அவர் வைத்திருக்கும் லாப்டாப்பையும் இந்த டேபை யும் வைத்து போன் நெட்டில் சமாளிக்கலாம் என பைத்தியக்காரத்தனமாகத் திட்டம் போட்டோம். காலை எட்டு மணிக்கு கனெக்ட் செய்தால், கூகுள் கிளாஸ்ரூம் சிக்கல்கள் . அதாவது மகனின் ஐடி எல்லாவற்றிலும் ஓபன் ஆகும். மகளுடையது இரண்டாவது டிவைசில் ஓபன் ஆகாது. பெண்கள் பள்ளி என்ற பாதுகாப்பு செட்டிங்கா என தெரியவில்லை.
நேரத்திற்கு மீட்டிங்கில் கனெக்ட் ஆகாது. பள்ளி வாட்சப் குழுவில் அனைத்து தாய்மார்களும் தந்தைமார்களும் லபோ திபோ என அடித்துக் கொள்வார்கள். அதிலும் டைம் டேபிள் பார்த்து பார்த்து சரியான கிளாஸ் கோட் கொடுத்து உள்ளே செல்லவேண்டும். எனக்கே மூச்சு முட்டும்போது பிள்ளைகள் தனியாக என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.
நேரத்திற்கு மீட்டிங்கில் கனெக்ட் ஆகாது. பள்ளி வாட்சப் குழுவில் அனைத்து தாய்மார்களும் தந்தைமார்களும் லபோ திபோ என அடித்துக் கொள்வார்கள். அதிலும் டைம் டேபிள் பார்த்து பார்த்து சரியான கிளாஸ் கோட் கொடுத்து உள்ளே செல்லவேண்டும். எனக்கே மூச்சு முட்டும்போது பிள்ளைகள் தனியாக என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.
📌அடுத்து நெட் சிக்கல். ஒரு மணிநேரத்தில் இருவருக்கும் சேர்ந்து இரண்டு ஜிபி காலி. ஜியோவில் போட்ட நெட்பேக் ‘சல்சல்’லென தீரும். ஏர்டெல் சிறிது தாக்கு பிடிக்கும். ஆக அவரது இரு ஜிபி என்னுடைய மூன்று ஜிபி என ஓட்டுகிறோம். பிராண்ட்பேண்ட் கனெக்சனுக்கு வருந்தி வருந்தி அழைத்தும் யாரும் இப்போதுவரை வர வில்லை. மீட்டிங் நடக்க நடக்க சார்ஜ் தீரும், ஹெட்செட் கேக்காது, திரையில் ஏதேனும் பாப்அப் தோன்றும்.இவர்கள் கை கால் பட்டு ஏதாவது ஆகும்.இவற்றை சரி செய்யணும்.
கிட்டத்திட்ட நானும் அவர்களோடேயே அமர்ந்தாகணும்.இவை அத்தனையும் சேர்ந்து கடும் மன உளைச்சலைத் தந்தது.
கிட்டத்திட்ட நானும் அவர்களோடேயே அமர்ந்தாகணும்.இவை அத்தனையும் சேர்ந்து கடும் மன உளைச்சலைத் தந்தது.
📌குறிப்பாக எனக்கு, மாற்றி மாற்றி டிவைசு களை கனெக்ட் செய்வதும், சார்ஜ் செய்வதும், சிக்கல்களை டிரபிள்சூட் செய்வதுமாக மூச்சு திணறியது. இதற்கிடையில் வீட்டுப்பணிகள். கடந்தவாரம் ஆபீசுக்குப் போயே தீர வேண்டிய தினம். லீவெல்லாம் காலி. மகனுக்கு படித்து படித்து பாடமெடுத்து அவளையும் கவனி என்று சொல்லி கனெக்சன்களை விளக்கி னோம். ஆபீசில் அமர்ந்த ஐந்தாவது நிமிசத்துக்கு போன் வருகிறது. இது கனெக்ட் ஆகல..அது, இது என.. நீ ஆன்லைன் கிளாஸ் அட்டண்ட் பண்ணவே வேணாம் விடு.. என்று சொல்லி விட்டு எங்க வேலையைப் பார்த்தோம். மாலை பள்ளி வாட்சப் குழுவில் பகிரப்பட்ட வீட்டுப் பாடங்கள், நடத்தப்பட்ட பாடங்கள் மீண்டும் மனச்சுமையை கூட்டின. இனி நாளை முதல் இருவருக்கும் அலுவலகம்.என்ன செய்யப் போகிறோம் என தெரியவில்லை.
No comments:
Post a Comment