சர்வதேச உயர் கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில், இந்திய நிறுவனங்கள் நிலவரம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/06/2020

சர்வதேச உயர் கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில், இந்திய நிறுவனங்கள் நிலவரம்


புதுடில்லி: சர்வதேச உயர் கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில், இந்திய நிறுவனங்கள் பின்தங்கியுள்ளன.
பிரிட்டனின், க்யூ.எஸ்., உலக தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்காவின், எம்.ஐ.டி., முதல் இடம் பெற்றுள்ளது. ஸ்டேன்போர்டு பல்கலை, இரண்டாம் இடம் மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை, மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
ஆசிய அளவில், சிங்கப்பூர் என்.டி.யூ., பல்கலை, முதலிடம் பெற்றுள்ளது.
சர்வதேச அளவில், இந்த பல்கலை, 11ம் இடம் பெற்றுள்ளது. இந்திய அளவில், மும்பை ஐ.ஐ.டி., 172ம் இடத்துடன், முன்னணி இடத்தில் உள்ளது. பெங்களூரு ஐ.ஐ.எஸ்., 185; டில்லி ஐ.ஐ.டி., 193ம் இடங்களை பெற்று, இந்தியாவில், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளன. எப்போதும் முன்னணி இடம்பெறும், சென்னை ஐ.ஐ.டி., 275வது இடத்தை பெற்றுள்ளது.
தமிழகத்தில், அரசு பல்கலைகளில், அண்ணா பல்கலை மட்டும், பட்டியலில் இடம் பெற்றுள்ளது.அண்ணா பல்கலை, அமிர்தா கல்வி நிறுவனம் மற்றும் வி.ஐ.டி., ஆகியன, 801 முதல், 1,000 இடங்கள் வரையிலான இடத்தில் உள்ளன. தமிழகத்தில் மற்ற பல்கலைகள், இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459