ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க விலக்கு - ஆசிரியர் மலர்

Latest

 




 


30/06/2020

ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க விலக்கு


ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க இந்த 2020-ம் ஆண்டுக்கு மட்டும் விலக்களித்து பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், ஓய்வூதியம் பெற ஆண்டுதோறும் ஏப்ரல், மே அல்லது ஜூன் மாதத்துக்குள், உயிர்வாழ் சான்றிதழ், வேலையில்லாததற்கான சான்றிதழ், திருமணம், மறுமணம் செய்யாததற்கான சான்றிதழ்களை அந்தந்தமாவட்ட ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு ஜூன் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படாவிட்டால், ஜூலை மாதம் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி ஓய்வூதியர்களை நேரில் அழைப்பார்
. நேரில் ஆஜராகாத பட்சத்தில் அந்த மாதத்தில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கால் உயிர்வாழ் சான்றிதழை அவர்களிடம் இருந்து பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டு, இந்த ஆண்டுக்கு சான்றிதழ் அளிப்பதில் இருந்து விலக்களிக்க கருவூலத் துறை ஆணையர், அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று, கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு சிறப்பினமாக இந்த ஆண்டுக்கு மட்டும் உள்ளிட்ட சான்றிதழ்கள் அளிப்பதில் இருந்து விலக்களித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459