New
புது தில்லி: தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக தலைமைச் செயலாளராக இருக்கும் சண்முகத்தின் பதவிக் காலம் வரும் ஜூலை மாத இறுதியில் முடிவடைய இருந்தது. இதற்கிடையே, சண்முகத்தின் பதவிக் காலத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசு வைத்த கோரிக்கையை ஏற்று, அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சண்முகத்தின் பதவிக் காலத்தை ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment